×

ராஜஸ்தான் மதிய உணவு திட்டத்தில் ரூ.2000 கோடி ஊழல்: அமலாக்கத்துறை விரைவில் விசாரணை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2020-2023 ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. அப்போது ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 3 கோடிக்கும் மேலான மாணவர்களுக்கு பருப்பு, எண்ணெய், மசாலா பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த காலக்கட்டத்தில் இந்த திட்டத்திற்கு அரசு ரூ.2023 கோடி செலவழித்துள்ளது. ராஜஸ்தான் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக ராஜஸ்தான் ஊழல் ஒழிப்பு பிரிவு கடந்த 7ம் தேதி வழக்கு பதிவு செய்தது. இதில், ராஜஸ்தான் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பில் பணியாற்றிய அதிகாரிகள் உட்பட 21 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மதிய உணவு திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பாக ராஜஸ்தான் ஊழல் தடுப்பு பிரிவுக்கு அமலாக்கத்துறை அனுப்பியுள்ள குறிப்பில்,மதிய உணவு திட்டத்தில் ரூ.2000 கோடிக்கு ஊழல் நடந்ததற்கான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக அமலாகத்துறை விரைவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Rajasthan ,Enforcement Directorate ,Jaipur ,Congress government ,
× RELATED அனுமதியின்றி செல்போனில் இருந்த...