- தேவஸ்தானம்
- ஸ்ரீவானி தர்சனா
- திருப்பதி எருமாலயன் கோயில்
- சாமி வ்ரிசனா
- திருமலை
- ஸ்ரீவானி அறக்கட்டளை
- சாமி
- திருப்பதியில்
- எலுமாலயன்
- கோவில்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் எந்தவித சிபாரிசு கடிதங்களும் இல்லாமல் விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக ஸ்ரீ வாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளைக்கு பக்தர்கள் வழங்கும் நன்கொடை மூலமாக பழைய கோயில்கள் புனரமைக்கவும், புது கோவில்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ 10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. தரிசனத்தில் அனுமதிக்கப்படுகிறது. இந்தநிலையில் திருமலையில் தினந்தோறும் நேரடியாக வரும் பக்தர்களுக்கு ஒரு நாளைக்கு 800 டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது.
இதேபோன்று திருப்பதி விமான நிலையத்தில் 200 டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்தநிலையில் திருமலையில் வழங்கப்படும் டிக்கெட்களை பெற பக்தர்கள் இரவு முதல் வரிசையில் காத்திருக்கின்றனர். எனவே பக்தர்கள் சிரமத்தை கருத்தில் கொண்டு பக்தர்களின் வசதிக்காகவும் நிர்வாகத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் வழங்குவதில் மாற்றங்களைச் செய்ய தேவஸ்தானம் முக்கிய முடிவை எடுத்துள்ளது. திருமலையில் இதுவரை ஆப்லைனில் வழங்கப்பட்ட கவுண்டர்கள் ஜனவரி 9 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளது.
பக்தர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடி தேவஸ்தானத்தின் மொபைல் செயலி அல்லது இணையத்தில் தினந்தோறும் 800 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் அந்தந்த நடப்பு நாட்களில் பெறலாம். இந்த டிக்கெட்டுகள் தினந்தோறும் காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் பிற்பகல் 2 மணி வரை கிடைக்கும். டிக்கெட் பெற்ற பக்தர்கள் அதே நாளில் மாலை 4 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும். ஒரு குடும்பத்தில் இருந்து 1+3 உறுப்பினர்கள் (மொத்தம் நான்கு) மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
டிக்கெட் முன்பதிவில் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க ஆதார் சரிபார்ப்பு மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்கள் கட்டாயமாகும். பக்தர்கள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதனால், ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளுக்காக பக்தர்கள் ஆஃப்லைனில் வரிசையில் காத்திருக்கும் பிரச்சனை தவீர்க்கப்படும். இந்த புதிய முறை ஒரு மாதத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். இதேபோல், ஒரு நாளைக்கு 500 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் ஏற்கனவே ஆன்லைன் முன்பதிவு மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த செயல்முறையும் மூன்று மாதங்களுக்குப் பிறகு மதிப்பாய்வு செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும். திருப்பதி விமான நிலையத்தில் தினமும் பக்தர்களுக்கு 200 டிக்கெட்டுகளை ஆஃப்லைனில் வழங்குவது வழக்கம் போல் தொடரும். எனவே அனைத்து பக்தர்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு தேவஸ்தானம் எடுத்துள்ள முடிவை பக்தர்கள் தங்கள் தரிசனத் திட்டங்களைத் திட்டமிட்டு சாமி தரிசனத்திற்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
