மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 1,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 1,200 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது. அதேசமயம் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 384 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 164 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு, நீர்மின் நிலையங்கள் வழியாக, விநாடிக்கு 11,000 கனஅடி, கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. வரத்தை விட நீர்திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 104.04 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 103.30 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 69.18 டிஎம்சியாக உள்ளது.
