×

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் வரும் 19ம் தேதி திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் வரும் 19ம் தேதி “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கடந்த மாதம் 29ம் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு வெற்றிகரமாக நடந்தது.

இதை தொடர்ந்து வருகிற 19ம் தேதி மாலை 4 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தலைமை வகிக்கிறார். முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலை வகிக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.

இதில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி- திமுக மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன், மகளிர் அணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ப.இராணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.ரகுபதி, சி.வி.கணேசன் மற்றும் பூண்டி கே.கலைவாணன், காடுவெட்டி தியாகராஜன், க.வைரமணி, க.அன்பழகன், வீ.ஜெகதீசன், நிவேதா முருகன், கே.கே.செல்லபாண்டியன், என்.கவுதமன், டி.பழனிவேல், அமைச்சர்கள் கோவி.செழியன், சிவ.வீ.மெய்யநாதன், டி.ஆர்.பி.ராஜா, எம்பிக்கள் அருண்நேரு, முரசொலி ஆகியோர் மாநாட்டினை ஒருங்கிணைப்பார்கள். தஞ்சாவூர் மத்திய மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ நன்றியுரையாற்றுகிறார்.

Tags : DMK Delta Zone Women's Team Conference ,Chengipatti, Thanjavur district ,Chennai ,Vellum Tamil Women" DMK Delta Zone Women's Team Conference ,Chief Minister ,M.K. Stalin ,DMK ,
× RELATED வேடசந்தூர் அருகே வேன் மோதி பாத...