×

முதியோர், மாற்றுத்திறனாளி இல்லம் சென்று தாயுமானவர் திட்டத்தில் 4, 5ம் தேதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம்

சென்னை: தாயுமானவர் திட்டத்தில் ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படும். இதுகுறித்து தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கை: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜனவரி மாதத்தின் 4 (நாளை) மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னையில் அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் 990 நியாயவிலை கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசிய பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Cooperative Department of the Government of Tamil Nadu ,
× RELATED வேடசந்தூர் அருகே வேன் மோதி பாத...