- ஜனாதிபதி தினம்
- வேலூர் ஸ்ரீபுரா
- வேலூர்
- ஜனாதிபதி
- த்ரவுபதி
- முர்மு திருபதி
- வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோயில்
வேலூர் : ஜனாதிபதி திரவுபதி முர்மு திருப்பதியில் இருந்து நாளை (17ம் தேதி) காலை 11.05 மணிக்கு வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலுக்கு வருகிறார். அங்கு கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைக்கிறார். மதியம் 12.30 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு செல்கிறார். இதையொட்டி வேலூர் நகரம் மற்றும் தங்கக்கோயில் சுற்றியுள்ள பகுதி முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்பு படையை சேர்ந்த 3 டிஎஸ்பிக்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான குழுவினர் கோயில் வளாக பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீபுரம் நாராயணி மஹாலில் கலெக்டர் சுப்புலட்சுமி, எஸ்பி மயில்வாகனன், சிறப்பு பாதுகாப்பு படை எஸ்பி ஸ்டீபன்ஜேசுபாதம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஜனாதிபதி ஹெலிகாப்டரில் வர இருப்பதால் ஹெலிகாப்டர் மூலம் நேற்று ஒத்திகை நடந்தது.
