×

பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் பெயர் மாற்றப்பட்ட திட்டங்கள், சட்டங்கள்!!

டெல்லி : பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் திட்டங்களின் பெயர் மாற்றப்படுவது இது முதன்முறையல்ல. ஒன்றிய பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 30க்கும் மேற்பட்ட திட்டங்கள், சட்டங்களின் பெயரை மாற்றி உள்ளது. 2005ம் ஆண்டு கொன்டு வரப்பட்ட ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம், 2015ம் ஆண்டில் அடல் மிஷன் புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றம் என மாற்றப்பட்டது. அதே போல் கிராமப்புற பகுதிகளுக்கு மின்சார வசதி வழங்கும் ராஜீவ் காந்தி கிராமின் வித்யுதிகரன் யோஜனா திட்டம் 2015ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட, தீன்தயாள் உபாத்யாய கிராம் ஜோதி யோஜனா திட்டத்தில் இணைக்கப்பட்டது.

கிராமப்புற வீட்டு வசதி திட்டமான இந்திரா அவாஸ் யோஜனா திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என மாற்றி அமைக்கப்பட்டது. பெயர் மாற்றங்கள் திட்டங்களில் மட்டுமல்லாமல், சட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டன. ஐபிசி எனப்படும் இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 (சிஆர்பிசி), இந்திய சாட்சிகள் சட்டம் 1987 ஆகியவற்றிற்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023, பாரதீய சாக்ஷிய அதினியம் 2023 என 3 சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதே போல், மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மகளிர் இடஒதுக்கீடு சட்டம், நாரி சக்தி வந்தன் சட்டமாக மாறியுள்ளது.

Tags : Modi ,Delhi ,Union BJP government ,Jawaharlal ,
× RELATED ஆண்கள் வங்கிக் கணக்கில் வரவு...