தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது. இதைடுத்து, தொற்று அறிகுறி உள்ளவர்களிடம் பரிசோதனையை மேற்கொள்வது அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பூஜ்ஜியத்தை நெருங்கி வந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் தமிழ்நாடு மாநில சுகாதார பேரவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர்; கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து உலகம் முழுவதும் மீண்டும் தாண்டவம் ஆடுகிறது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லை; கொரோனா வழிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் 100% முகக்கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், உடன் வருவோர், மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் இவ்வாறு கூறினார்.

Related Stories: