குற்றாலத்தில் சீசன் களை கட்டியது

தென்காசி: குற்றாலத்தில் வழக்கமாக ஜூன் மாதம் சீசன் துவங்கி வந்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு மே மாதத்தில் 2வது வாரத்திலேயே சீசன் துவங்கியுள்ளது. இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரலும் பெய்தது. இதமான தென்றல் காற்று வீசுகிறது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுந்தது.

ஐந்தருவியில் ஆண்கள் பகுதியில் 2 பிரிவிலும், பெண்கள் பகுதியில் 2 பிரிவிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. பழைய குற்றால அருவியில் ஒரளவு தண்ணீர் நன்றாக விழுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையும் நன்றாக இருந்தது. மெயினருவியில் தண்ணீர் நன்றாக விழுவதால் சுற்றுலா பயணிகள் வரிசையின்றி குளித்து மகிழ்ந்தனர்.

Related Stories: