திருவாரூர் வடபாதிமங்கலத்தில் ரூ.80 லட்சம் ஏமாற்றிய புகாரில் பாஜக நிர்வாகி உள்பட 2 பேர் மீது வழக்குப் பதிவு

திருவாரூர்: திருவாரூர் வடபாதிமங்கலத்தில் ரூ.80 லட்சம் ஏமாற்றிய புகாரில் பாஜக நிர்வாகி உள்பட 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வடபாதிமங்கலத்தைச் சேர்ந்த தீபன் என்பவர் சிங்கப்பூரில் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். தொழில் முதலீடு செய்ய பாஜக மாவட்ட செயலாளர் சங்கரிடம் ரூ.80 லட்சம் கொடுத்துள்ளார். சங்கரிடம் தான் கொடுத்த பணத்தை அவரது வீட்டிற்கே சென்று தீபன் கேட்டுள்ளார். தான் பணத்தை வாங்கவில்லை எனவும் பணத்தை திரும்ப தர இயலாது என சங்கர் கூறியுள்ளார்.

The post திருவாரூர் வடபாதிமங்கலத்தில் ரூ.80 லட்சம் ஏமாற்றிய புகாரில் பாஜக நிர்வாகி உள்பட 2 பேர் மீது வழக்குப் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: