அந்த வகையில் ஸ்ரீநகரில் உள்ள லிட்வாஸ் என்ற அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் நமது பாதுகாப்பு படையினருக்கும் நடந்த மோதலில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள், மன நிம்மதியளிக்கிறது. அந்தப் பயங்கரவாதிகளால் நிகழவிருந்த பெரும் அசம்பாவிதங்களைத் தடுத்து நிறுத்தியுள்ளது நமது வலிமைமிகுந்த இந்திய ராணுவம்.
நாட்டு மக்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் பொருட்டு இத்தகைய முன்னெடுப்புகளைத் துரிதப்படுத்தியுள்ள நமது பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
The post ஆபரேஷன் மஹாதேவ்; இந்திய ராணுவத்திற்கு மனதார பாராட்டுக்கள்: நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு appeared first on Dinakaran.
