கொடநாடு கொலை வழக்கில் 2 பேர் ஜாமீனில் விடுதலை

ஊட்டி: ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட்டில் கடந்த 2017ல்  காவலாளியை கொன்று கும்பல் ஒன்று கொள்ளையடித்தது. இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். 3 ஆண்டுகளாக இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் சயான், ஜம்சீர் அலி, ஜித்தின் ஜாய், தீபு உட்பட 8 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் அண்ணன் தனபால், கனகராஜின் மனைவி, மைத்துனர், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் உட்பட இதுவரை 150க்கும் மேற்பட்டவர்களிடம் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. கொரோனா பரவல் காரணமாக வீடியோ கான்பிரன்ஸ் மூலம் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜராகினர். அரசு தரப்பில் வக்கீல் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் சென்னையில் இருந்து ஆஜரானார்கள்.

போலீசாரும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகினர். இதையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சஞசய்பாபா உத்தரவிட்டார். 2 பேருக்கு ஜாமீன்:  கொடநாடு கொலை வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த தனபால், ரமேஷ் ஆகியோரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சோலூர்மட்டம் போலீசார் கைது செய்தனர். இவர்கள் கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி சஞ்சய் பாபா நேற்று உத்தரவிட்டார். இவர்கள் வழக்கு முடியும் வரை ஊட்டியில் தங்கியிருந்து தினமும் சோலூர் மட்டம் காவல்நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: