சென்னை: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4.06 மேல் அதிகரித்துள்ளது. 4.92 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 26,533 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15,579 பேர் ஆண்கள், 10,954 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32 லட்சத்து 79 ஆயிரத்து 284 ஆக அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 26,533 பேருக்கு கொரோனா உறுதி; 28,156 பேர் டிஸ்சார்ஜ்; 48 பேர் உயிரிழப்பு!
