சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஜெயந்தி விழா: தமிழக கவர்னர் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கை சங்கராச்சாரியார் மணிமண்டபத்தில் மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி 87வது ஜெயந்தி விழாவில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். காஞ்சிபுரம் ஓரிக்கை சங்கராச்சாரியார் மணிமண்டபத்தில் மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் 87 வது ஜெயந்தி விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் காமகோடி பீடத்தில் 69வது பீடாதிபதியாக இருந்து சித்தியடைந்த  ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 87வது ஜெயந்தி விழா காஞ்சிபுரம் சங்கர மடம் சார்பில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று பங்கேற்றார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் அமைந்துள்ள சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரின் பிருந்தாவனங்களை தரிசித்த பின்னர், காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள  சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் மணிமண்டபத்தில் நடந்த விழாவில் கவர்னர் கலந்து கொண்டார்.

சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் தலைமையில் நடந்த  விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு, ஆந்திரப் பிரதேச முன்னாள் எம்எல்ஏ எழுதிய வியட்நாம் கம்போடியா நாட்டில் இந்து கோயில்கள் எனும் புத்தகத்தை வெளியிட்டார்.

Related Stories:

>