ஐ.டி. ஊழியர் கவின் கொலையை கண்டித்து அவரது உறவினர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்

நெல்லை : நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலை வழக்கில், கொலை செய்த சுர்ஜிதின் பெற்றோர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை உறுதிமொழி அளித்ததை அடுத்து முக்காணி பகுதியில் கடந்த 3 மணி நேரமாக நடந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. எஸ்.ஐ.களாக உள்ள இருவரும் கைது செய்யப்பட்ட பிறகே கொல்லப்பட்ட கவினின் உடலைப் பெற்றுக்கொள்வோம் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சுர்ஜித் மற்றும் எஸ்.ஐ.கள் சரவணன், கிருஷ்ணகுமாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post ஐ.டி. ஊழியர் கவின் கொலையை கண்டித்து அவரது உறவினர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் appeared first on Dinakaran.

Related Stories: