சுழற்சி பொருளாதாரத்தை ஊக்குவிக்க இணைய வழி கழிவு பரிமாற்ற மையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சுழற்சி பொருளாதாரத்தை ஊக்குவிக்க இணைய வழி கழிவு பரிமாற்ற மையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நிலைத்த மற்றும் சூழல் சார் வளர்ச்சியை மையமாகக் கொண்டு. பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு ஒரு முன்னணி தொழில்துறை மாநிலமாகத் திகழ்கிறது. இருப்பினும், விரைவான தொழில்துறை விரிவாக்கம், சாம்பல், மின்னணு கழிவுகள் மற்றும் பல தவிர்க்க முடியாத கழிவுகளையும் உருவாக்குகிறது. இத்தகைய கழிவுப் பொருட்களை மதிப்புமிக்க வளங்களாகக் கருதி, உயர் மதிப்புள்ள சந்தைப்பொருட் களாக மாற்றும்போது. அது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், சுழற்சி பொருளாதாரத்தை (Circular Economy) மேம்படுத்தும் வகையிலும் அமைகிறது.

இந்த நோக்கத்தை அடைவதற்கான தொலைநோக்கு பார்வையுடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB) தொடங்கும் ஒரு புதுமையான முயற்சியே இந்த இணைய வழி கழிவு பரிமாற்ற மையம் (Online Waste Exchange Bureau). இந்த தளம், கழிவு உருவாக்குபவர்களையும் சான்றளிக்கப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்கள் மற்றும் பிற கழிவு பயன்பாட்டாளர்களையும் இணைக்கும் ஒரு பாலமாக செயல்படுகிறது. இதன்மூலம், கழிவுகளை பயனுள்ள பொருட்களாக மாற்ற வழிவகை செய்வதுடனும், கழிவு பரிமாற்றத்தையும் எளிதாக்குகிறது. இத்தளம், கழிவு உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களை அதன் வகை. அளவு. மற்றும் இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பட்டியலிட வகை செய்வதுடன், அவர்களை பொருத்தமான மறுசுழற்சி நிறுவனங்கள் மற்றும் பிற பயனாளர்களுடன் இணைக்க உதவுகிறது.

இதன்மூலம், சூழல் சார் கழிவு மேலாண்மை திறம்பட செயல்படுவதுடனும், மேம்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைகிறது. பலர் ஏற்கனவே இந்த இணைய வழி கழிவு பரிமாற்ற தளத்தில் பதிவு செய்துவிட்டார்கள். இன்றே பதிவு செய்து தீர்வின் ஒரு பகுதியாகுங்கள்! இணைய வழி கழிவு பரிமாற்ற மையம் கழிவு அதன் வாய்ப்பினை சந்திக்கும் இடம் – tnpcb.gov.in/OWEMS ல் இன்றே அணுகுங்கள்.

 

The post சுழற்சி பொருளாதாரத்தை ஊக்குவிக்க இணைய வழி கழிவு பரிமாற்ற மையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்! appeared first on Dinakaran.

Related Stories: