தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஸ்ரீலீலா, ‘புஷ்பா 2: தி ரூல்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘கிஸ்ஸிக்’ என்ற பாடல் காட்சியில், அல்லு அர்ஜூனுடன் இணைந்து நடனமாடி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார். தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக அவர் நடித்துள்ள ‘பராசக்தி’ படம், வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீலீலாவிடம், மலேசியா கார் பந்தய மைதானத்தில் திடீரென்று அஜித் குமாரை சந்தித்தது ஏன் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘நான் அஜித் குமாரின் தீவிர ரசிகை. மேலும், கார் ரேஸில் எனக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. அதனால்தான் அவரை நேரில் சந்தித்தேன்.
அப்போது அவருடன் செல்ஃபி எடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது’ என்றார். ‘குட் பேட் அக்லி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் 64வது படத்தில், அஜித் குமார் ஜோடியாக ஸ்ரீலீலா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ‘இனிமேல் சிறப்பு பாடல்களில் நடனமாட மாட்டேன்’ என்று ஸ்ரீலீலா தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘நான் நடிக்கும் படங்களில் மட்டுமே நடனமாட விரும்புகிறேன்.
பிற நடிகர்களின் படங்களில் சிறப்பு பாடல்களில் ஆடுவதற்கு விருப்பம் இல்லை. ஆனால், அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் நான் நடனமாடியதை சரியான முடிவாகவே பார்க்கிறேன். அதன்மூலம் எனக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது’ என்றார்.
