சென்னை: துபாயில் நடிகர் மாதவன் ₹14 கோடிக்கு சொகுசு படகு ஒன்றை வாங்கியுள்ளார். சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட துபாய் சென்ற மாதவன், அவரது மனைவி சரிதா மற்றும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி ஆகியோர் சொகுசு படகில் அரட்டை அடித்தபடி இருக்கும் புகைப்படங்கள் வைரலானது. அப்போதுதான் இந்த படகு, மாதவனுக்கு சொந்தமானது என்பது தெரிந்தது. துபாயில் ஏற்கனவே வீடு வைத்திருக்கும் மாதவன், விடுமுறையை கொண்டாட அங்கு சென்றுவிடுவார். அதுபோல்தான் இம்முறையும் சென்றார்.
படகு ஓட்டுவதற்கு அவர் துபாயில் பயிற்சி பெற்று அதற்கான லைசன்சும் பெற்றுவிட்டார். இதையடுத்து ₹14 கோடிக்கு அவர் இந்த படகை வாங்கியுள்ளார். ஓய்வு எடுக்கவும், படத்துக்கான கதை விவாதங்களில் இயக்குனர்களுடன் ஈடுபடவும் இந்த படகை அவர் வாங்கியிருக்கிறாராம். ‘டெஸ்ட்’ என்ற தமிழ் படத்தில் நயன்தாராவுடன் மாதவன் நடித்து வருகிறார். அப்போதுதான் இவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டு, துபாய்க்கு நயன்தாரா வந்தபோது, தனது படகு ட்ரீப்புக்கு வரும்படி மாதவன் அழைப்பு தந்தாராம்.