விஜய் சேதுபதி மஞ்சு வாரியர் நெருக்கமான காட்சி: சென்சார் போர்டு நடவடிக்கை

சென்னை: ‘விடுதலை 2’ படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியரின் நெருக்கமான காட்சி இடம்பெற்றுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கவுதம் ேமனன், ராஜீவ் மேனன் உள்பட பலர் நடித்துள்ள படம் ‘விடுதலை 2’. இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் இன்று திரைக்கு வருகிறது. சமீபத்தில் சென்சார் போர்டுக்கு சென்றபோது படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. அது தொடர்பான தகவல் இப்போது வெளியே வந்துள்ளது. படத்தில் வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படம் மொத்தம் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் ஓடும் எனவும் தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் சென்சார்டு போர்டு அரசு, அரசாங்கங்கள், தேசிய இன விடுதலை உள்ளிட்ட வார்த்தைகளை மாற்றியிருக்கிறது. மேலும் வட்டார வழக்கு வார்த்தைகள் எல்லாம் மியூட் செய்யப்பட்டிருக்கிறது. சில கெட்ட வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளதாம். இந்நிலையில் படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் இடையே நெருக்கமான காட்சி இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த காரணங்களாலேயே படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ‘போராளிகள் பற்றிய கதையில் துப்பாக்கி, ரத்தம் போன்றவற்றை தவிர்க்க முடியாது. ஆனால் படம் என்ன பேசுகிறது என்பதே முக்கியம். அந்த வகையில் விடுதலை 2, தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படமாக இருக்கும்’ என திரைப்பட விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Related Stories: