சென்னை: லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படம் விடா முயற்சி. திரிஷா, ரெஜினா, அர்ஜுன், சுனில் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 10ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் புது தோற்றத்தில் அஜித் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி, இணையதளத்தில் வைரலானது. அதில் கோட் சூட் போட்டுக்கொண்டு பில்லா அஜித்தை நினைவுபடுத்தும் வகையில் போஸ்களை கொடுத்துள்ளார் அஜித். படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.