இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 4ம் தேதி புஷ்பா 2 படத்தின் பிரீமியர் ஷோவின்போது, ஹீரோ, ஹீரோயின் வருவார்கள் என்று தியேட்டர் உரிமையாளர், போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியிருந்தனர். ஆனால் அவர்கள் வந்தால் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே அவர்கள் வர வேண்டாம் என்று தியேட்டர் உரிமையாளருக்கு பதிலளிக்கப்பட்டது. போலீஸ் எச்சரிக்கையை மீறி அல்லு அர்ஜுனும் தியேட்டர் உரிமையாளரும் நடந்து கொண்டதாகவும், அல்லு அர்ஜூன் பேரணியாக வந்ததாகவும், இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் இறந்துள்ளார். அவரது மகன் தேஜ் நேற்று மூளைச்சாவு அடைந்தார். எனவே அல்லுஅர்ஜூனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம்.