சபரிமலை பக்தர்களின் கதை சன்னிதானம்

சென்னை: சர்வதா சினி கராஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் தயாரிக்க, அமுதா சாரதியின் வசனம். இயக்கத்தில் உருவாகும் படம் ‘சன்னிதானம்’. இப்படத்தை மது ராவ், வி.விவேகானந்தன் மற்றும் ஷபீர் ஃபடான் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்தில் ‘யோகி’பாபு, கன்னட நடிகர் ரூபேஷ் ஷெட்டி மற்றும் வர்ஷா விஸ்வநாத் ஆகிய மூவரும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் சித்தாரா, பிரமோத் ஷெட்டி, அஷ்வின் ஹாசன், வினோத் சாகர், ‘கல்கி’ ராஜா, விஷாலினி, தாஷ்மிகா லக்ஷ்மன் மற்றும் மது ராவ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.
சபரிமலைக்கு பயணிக்கும் ஐயப்ப பக்தர்கள் செல்லும் வழியில் அவர்கள் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளே இத்திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை அஜினு ஐயப்பன் எழுத, அருண்ராஜ் இசையமைக்கிறார். படத்தின் ஒளிப்பதிவாளராக வினோத் பாரதியும், படத்தொகுப்பாளராக பி.கே-வும் பணியாற்றுகிறார்கள்.

Related Stories: