அதில், ‘‘குழந்தை என்றால் யாருக்கு தான் பிடிக்காது. பெண்களுக்கு இதுதான் முக்கியமான விஷயம். இதுபற்றி நிறைய யோசித்திருக்கிறேன், ஆனால் எங்கேயோ ஒரு இடத்தில், எனக்கு குழந்தைகள் இருந்தால் தெலுங்கானாவில் அதை வைத்து என்னை பிளாக்மெயில் செய்ய வாய்ப்புள்ளது என்ற சந்தேகம் வந்தது. காரணம், அரசியலில் எனக்கு நிறைய எதிரிகள் இருந்தனர். சூழ்நிலையும் அப்போது அப்படி இருந்தது. அதன் காரணமாக குழந்தை வேண்டாம் என்று தோன்றியது. இது குறித்து என் கணவரிடம் கூறினேன் அவரும் எனது முடிவை ஏற்றுக்கொண்டார்’’ என்று தெரிவித்துள்ளார்.