தமிழுக்கு வந்தார் நீமா ரே

சென்னை: மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரா தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. இப்படத்தை சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார். மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் சிக்கல் ராஜேஷ் நடிக்கிறார். கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார்.

இவர் கன்னடத்தில் வெளியான பங்காரா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர். மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி ராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.

Related Stories: