×

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-24

சென்னை: சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிபெற்ற ‘டான்’ என்ற படத்தை எழுதி இயக்கியவர், சிபி சக்கரவர்த்தி. இவர், இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். `டான்’ படத்துக்குப் பிறகு மீண்டும் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது இத்தகவலை சிவகார்த்திகேயன் உறுதி செய்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். கன்னட நடிகை ருக்மணி வசந்த் ஹீரோயினாக நடிக்க, அனிருத் இசை அமைக்கிறார். இன்னும் பெயரிடவில்லை. இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் 24வது படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இது முடிந்த பிறகு சிவகார்த்திகேயனின் 25வது படம் உருவாகிறது. இதை சுதா கொங்கரா எழுதி இயக்குகிறார். ‘புறநானூறு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஜி.வி.பிரகாஷ் குமாரின் 100வது படமாகும்.

Tags : Sivakarthikeyan ,CP Chakraborty ,CHENNAI ,Priyanka Arul Mohan ,Atlee ,CB Chakraborty ,
× RELATED கால்ஷீட் பிரச்னை காரணமாக தெலுங்கு படத்தில் லீலா விலகல்