இந்நிலையில், சமந்தா அளித்த பேட்டியொன்றில், ‘எனக்கு வந்த மயோசிடிஸ் நோய் காரணமாக பல விஷயங்களை நான் மறுந்துவிட்டேன். ஞாபக மறதியால் ரொம்பவே கஷ்டப்பட்டுவிட்டேன். ஒரு சமயம், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூட யாரும் இல்லை. அதை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டிருக்கிறேன்’ என்று வேதனையுடன் சமந்தா பகிர்ந்துள்ளார். இப்படியெல்லாம் சமந்தா கஷ்டப்பட்டதை அறிந்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதலாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.