ஜூலை 28ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

 

கரூர், ஜூலை. 26: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஜூலை 28ம் தேதி நடப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும், மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காணப்படும், குறைகள் மற்றும் எரிவாயு நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் வரும் ஜூலை 28ம் தேதி நடக்கிறது.

இதில் முகவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வரப்பெறும் புகார்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு உருளைகள் விநியோகத்தை சீர்படுத்த வசதியாக கருர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கம் கலந்துகொள்கின்றனர்.

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஜூலை 28 மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே, எரிவாயு நுகர்வோர்கள் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜூலை 28ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: