லாலாப்பேட்டை, நவ. 15: கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்சப்பட்டி ஊராட்சியில் மகளிர் குழுவிற்கான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கட்டி 10 வருடங்களுக்கு மேல் ஆகிய நிலையில் கட்டிடம் மிகவும் சேதம் அடைந்து உள்ளது. மேலும் கட்டிடத்தின் முகப்பில் உள்ள தூண் இரண்டாக பிளந்து அந்தரத்தில் தொங்கிய நிலையில் உள்ளது. மேலும் இந்த கட்டிடத்தின் அருகே சமுதாய கூடம் மற்றும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.
மேலும் சமுதாய புறத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் போத பொதுமக்கள் அதிகளவு வந்து செல்வர்கள். மேலும் அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் அந்த வழியாக சென்று வருகின்றனர். கட்டிடம் இடிந்து ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
