க. பரமத்தி டிச.8: அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளுக்கான அடிக்கல் நடும் விழா எம்எல்ஏ இளங்கோ தலைமையில் நடைபெற்றது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கா.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ கலந்து கொண்டு புதிய பணிகளை துவக்கி வைத்தார். மொஞ்சனூர் ஊராட்சியில் தேவதான பாளையம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி, தென்னிலை கிழக்கு ஊராட்சியில் மாலைக் கோவில் சமுதாயக் கூடம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
மொத்தம் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் தார் சாலை மற்றும் சமுதாயக் கூடம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
