கரூர், டிச. 8: கரூரில் இருந்து திண்டுக்கல், ஈசநத்தம், பாகநத்தம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கோடங்கிப்பட்டி, தனியார் மகளிர் கல்லு£ரி வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்த சாலையில் கோடங்கிப்பட்டியை தாண்டியதும் தனியார் மகளிர் கல்லூரிக்கு முன்னதாக ஆபத்தான வளைவுச் சாலை உள்ளது. மேலும், இந்த வளைவுச் சாலையில் மணல் பரப்புகள் அதிகளவு ஆக்ரமித்துள்ளன.
இதன் காரணமாக விபத்துக்களும் நடைபெற வாய்ப்புகள் உள்ளன.எனவே இந்த வளைவுச் சாலையை ஒட்டி வாகன ஓட்டிகளின் நலன் கருதி வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வளைவு பாதையை பார்வையிட்டு அனைவரின் நலன் கருதி வேகத்தடை அமைக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
