குளித்தலை, டிச.13: மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர் கோயிலில் குடிநீரின்றி பக்கதர்கள் தவித்து வருதால் நடவடிக்கை எடுக்க கோயில் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ளது காசிக்கு அடுத்து வடக்கு நோக்கி இருக்கும் சிவதலங்களில் மிகவும் மிகவும் பிரசித்தி பெற்றதுமான கடம்பவனீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவிலில் இருந்து காவிரிக்கு அருகில் இருப்பதால் அங்கு கடம்பன் துறை மிகவும் பிரசித்தி பெற்றதாகும் என்பதால் சுற்றுவட்டாரத்திலிருந்து கிராமப்புற கோவில்களில் திருவிழா காலங்களிலும் கும்பாபிஷேக தினத்திலும் புனித நீர் எடுத்துச் செல்வதற்காக ஆயிரக்கணக்கானோர் காவிரியில் புனித நீராடி புனித நீர் எடுத்துச் செல்வது வழக்கம். அதுபோல் தை மாசம் தை பூசத்தன்று எட்டு ஊர் சாமிகள் ஒன்று கூடி தீர்த்தவாரி நடத்துவது பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச தீர்த்தவாரியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இறப்புகள் நேர்ந்தால் இறுதிச் சடங்கு ஈமைக்கிரிகை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது உறவினர்கள் ஏராளம் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோடை காலத்தில் தண்ணீர் இன்றி வறட்சி உள்ள நிலையில் பக்தர்கள் நீராடுவதற்கும் இறப்பு நிகழ்ச்சி ஏற்படும் பொழுது இமைக்கிரியை செய்யும் உறவினர் நீராடுவதற்கும் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு இருந்த நேரத்தில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது அது நகராட்சி நிர்வாகம் நிர்வாகத்தில் உள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் இல்லாத நேரத்தில் சரி தண்ணீர் இருக்கும் நேரத்திலும் சரி வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் இந்த குடிநீர் தொட்டியை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாற்றுத்திறனாளி ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மொட்டை அடித்தேன் நிலையில் அவர் நீண்ட தூரம் காவிரி ஆற்றுககு செல்ல முடியாத சூழ்நிலையில் கடம்பன் துறையில் இருக்கும் குடிநீர் தொட்டியில் குளிக்க வைக்கலாம் என்று நினைக்கும் பொழுது அங்கு இருப்பவர்கள் மின்மோட்டார் பழுது நீண்ட நாள் ஆகிறது இங்கு நீராட முடியாது எனக் கூறியதால் குடத்தை எடுத்துக் கொண்டு காவிரி ஆற்றுக்கு சென்று எடுத்து வந்து மொட்டை அடித்த மாற்றுத்திறனாளியை குளிக்க வைத்தனர் இதுபோன்ற நிலை தொடரக்கூடாது அதனால் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதான மின் மோட்டாரை சரி செய்து குளிரில் தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
