குளித்தலை, கிருஷ்ணராயபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கரூர், ஜூலை. 19: குளித்தலை, கிருஷ்ணராயபுரத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமை கலெக்டர் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டம் கரூர் மாவட்டத்தில் ஜூலை 15-ம்தேதி முதல் தொடங்கப்பட்டு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று (18.07.2025) குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் நடைபெற்ற முகாம்களை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பார்வையிட்டார்கள்.

அந்த வகையில் நங்கவரம் பேரூராட்சியில், வார்டு எண்1 முதல் 9 வரை, நங்கவரம் சமுதாய கூடத்திலும், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில், மணவாசி, மாயனுார் ஆகிய ஊராட்சிகளுக்கு மாயனுார் சமுதாய கூடத்திலும், கடவூர் வட்டாரத்தில், மஞ்சநாயக்கன்பட்டி, பண்ணப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு க்ஷிறிஸிசி கட்டிடம் கோவில்பட்டியிலும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாம்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் முகாம் சிறப்பாக நடைபெற துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்வின் போது குளித்தலை சட்ட மன்ற தொகுதியில் நடைபெற்ற முகாமில் சட்ட மன்ற உறுப்பினர் மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் சட்ட மன்ற தொகுதியில் நடைபெற்ற முகாம்களில் சட்ட மன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி கலந்து கொண்டனர். மேலும் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, நங்கவரம் பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தமூர்த்தி, வட்டாட்சியர்கள் இந்துமதி (குளித்தலை), பிரபாகரன்(கிருஷ்ணராயபுரம்) ஆகியோர் உடனிருந்தனர்.

The post குளித்தலை, கிருஷ்ணராயபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: