கிருஷ்ணராயபுரம், ஜூலை 14: கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூரில் உள்ள அரசு பூங்காவுக்கு விடுமுறைையொட்டி சிறுவர்கள், பொதுமக்கள் வருகையால் களை கட்டியது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூரில் காவிரி ஆற்று தென் கரையில் திருக்காம்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட அரசு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளது.
தினந்தோறும் கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் மற்றும் திண்டுக்கல், நாமக்கல், திருச்சி போன்ற மாவட்டங்களில் இருந்தும் 200க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் விடுமுறை நாட்களில் சுமார் 500 முதல் 1000 நபர்கள் வரை வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த இரு தினங்கள் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) பள்ளிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறை என்பதால் மாயனூரில் உள்ள அரசு பூங்காவிற்கு சிறுவர், சிறுமிகள் ஏராளமானோர் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்து விளையாடி மகிழ்தனர். இங்கு சிறுவர்களுக்கான சறுக்கல் விளையாட்டு, ஊஞ்சல் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் மற்றும் கலர் மீன்கள் போன்றவற்றை கண்டு களித்தனர். சிறுவர்கள் உற்சாகமாக சறுக்கு விளையாடினர்.
The post விடுமுறையையொட்டி மாயனூர் அரசு பூங்காவுக்கு ஏராளமான சிறுவர்கள் வருகை appeared first on Dinakaran.
