க.பரமத்தி, ஜூலை 5: க.பரமத்தியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடத்தப்படும் வீரவணக்க பேரணியில் பங்கேற்பது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாவட்ட செயலாளர் தென்னிலை ராஜா அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வேளாண் உரிமை மின்சார இணைப்பு பெற்றிருக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுதோறும் சராசரியாக 1,10,000 மின் கட்டணம் செலுத்துவதை 20 ஆண்டுகள் தொடர்ந்து போராடி 59 உயிர்களை தியாகம் செய்து உரிமைகளை பெற்றுக் கொடுத்த உழவர் போராளிகளுக்கு வீரவணக்க பேரணி இன்று (5ம் தேதி) தென்னிலை கடைவீதியில் உள்ள அரசு கால்நடை மருந்தகம் முன்பிருந்து தொடங்கி தென்னிலை பேருந்து நிறுத்தம் வரை நடைபெற உள்ளது.இதில் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன்முருகசாமி பங்கேற்கிறார். இதில் விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள்், விவசாயிகள் பங்கேற்க வேண்டும்.
The post க.பரமத்தியில் இன்று உழவர் போராளிகளுக்கு வீரவணக்க பேரணி appeared first on Dinakaran.
