பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடு திருப்பதி லட்டு வாங்க இனி வரிசையில் நிற்க வேண்டாம்: தரிசன டிக்ெகட்டை ஸ்கேன் செய்து நேரடியாக பெறலாம்

திருமலை: திருப்பதியில் பக்தர்களின் வசதிக்காக கியூஆர் கோடு ஸ்கேன் செய்து நேரடியாக லட்டு பெறும் வசதியை தேவஸ்தானம் கொண்டு வந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்கள் வரிசையில் நின்று பணம் செலுத்தி லட்டுகளை வாங்கி செல்வார்கள். இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் ​​லட்டு டிக்கெட்டுகளுக்காக வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லாத ஒரு புதிய முறை தேவஸ்தானம் செயல்படுத்த உள்ளது. அதில் பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல் டிஜிட்டல் முறையில் லட்டு டிக்கெட்டுகளைப் பெறலாம்.

இதற்காக ​​தொழில்நுட்பத்தின் உதவியுடன் டிஜிட்டல் லட்டு கொள்முதல் முறையைத் தொடங்க உள்ளது. இந்த புதிய முறையில், பக்தர்கள் தங்கள் தரிசன டிக்கெட் எண்ணை அதற்கென வைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் பதிவு செய்து, தங்களுக்குத் தேவையான லட்டுகளின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுத்து, யூ.பி.ஐ. அல்லது பிற டிஜிட்டல் பணம் செலுத்தி லட்டுக்கான டிக்கெட்டை பெறலாம். தற்போது, ​​யூனியன் வங்கி மற்றும் கனரா வங்கியின் கீழ் லட்டு கவுண்டரில் 5 இயந்திரங்களை அமைக்கப்பட்டுள்ளன. எம்.பி.சி. விசாரணை மையத்தில் மேலும் 3 இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்துடன் மேலும் சி.ஆர்.ஓ. அலுவலகம், பத்மாவதி விருந்தினர் மாளிகை மற்றும் விருந்தினர் மாளிகைகளிலும் இத்திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

 

The post பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடு திருப்பதி லட்டு வாங்க இனி வரிசையில் நிற்க வேண்டாம்: தரிசன டிக்ெகட்டை ஸ்கேன் செய்து நேரடியாக பெறலாம் appeared first on Dinakaran.

Related Stories: