ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தங்களது பயணிகளுக்கு கட்டண சலுகை அறிவிப்பு


டெல்லி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தங்களது பயணிகளுக்கு கட்டண சலுகை, தள்ளுபடி அறிவித்துள்ளது. உள்நாட்டு, சர்வதேச விமானங்களில் பயணிப்பவர்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சலுகை அறிவித்துள்ளது. சாதாரண எகனாமி கிளாஸ் டிக்கெட் கட்டணம் 15%, பிசினஸ் கிளாஸ் கட்டணம் 20% தள்ளுபடி; எக்ஸ்பிரஸ் பிசினஸ் கிளாஸ்-ல் பயணிப்போருக்கு டிக்கெட் கட்டண சலுகை 25% என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணிப்பவர்களுக்கு ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 28 முதல் ஆக.1 வரையிலான காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்படும் கட்டண சலுகை டிக்கெட் 2026 மார்ச் 31 வரை செல்லும். ஆடி மாதத்தில் வர்த்தக நிறுவனங்கள் தள்ளுபடி அறிவித்து பொருட்கள் விற்கின்றன. கடைகளைபோல் விமான நிறுவனமும் கட்டண சலுகை அறிவித்து தங்களை ஈர்க்கிறதா என்று பயணிகள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

The post ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தங்களது பயணிகளுக்கு கட்டண சலுகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: