ஜார்க்கண்ட் மாநிலம் தேவ்கரில் நடந்த சாலை விபத்தில் 18 பக்தர்கள் உயிரிழப்பு..!!

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்டின் தேவ்கரில், யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒரு லாரியுடன் மோதியதில் 18 பேர் உயிரிழந்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் உள்ள மோகன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜமுனியா வனப்பகுதிக்கு அருகே அதிகாலை 4.30 மணியளவில் கன்வாரியா பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டதாக அதிகாரி கூறினார்.

பாபா பைத்யநாத் தாம் கோவிலில் புனித நீரை வழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயணிக்கும் ஷ்ரவாணி மேளாவின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். ஜமுனியா வனப்பகுதிக்கு அருகே கன்வாரியாக்களை ஏற்றிச் சென்ற பேருந்து எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஜார்க்கண்ட் மாநிலம் தேவ்கரில் நடந்த சாலை விபத்தில் 18 பக்தர்கள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: