இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் ஏழைகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அடித்தட்டு மக்களை மேலே துக்கி விடுவதற்காகவே தமிழ்நாடு அரசு மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. எனவே, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பாக இன்று பயனாளிகளுக்கு சீர்மரபினர் நல அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளுக்கும் ஒரு வேலை இருக்கிறது. அதிலும் இந்த துறை மிகவும் முக்கியமான துறையாக இருக்கிறது. ஒரு துறை வெளியில் தெரிய வேண்டுமென்றால், அந்த துறையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடுக்கின்ற முயற்சியால் தான் தெரியும். அந்த வகையில் எண்ணற்ற திட்ட பயன்கள் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் சார்பில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் சார்பில், பயனாளிகளுக்கு சீர்மரபினர் நல அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுகிறது. அதனடிப்படையில் இன்று. சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் 2100 பயனாளிகளுக்கு சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளையும், 48 பயனாளிகளுக்கு ரூ.3,21,600/- மதிப்பிலான விலையில்லா தேய்ப்புப் பெட்டிகளையும், 5 பயனாளிகளுக்கு ரூ.28,000/- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், 1 பயனாளிக்கு ரூ.1,500/- மதிப்பிலான கல்வி உதவித்தொகையும், 23 பயனாளிகளுக்கு ரூ.3,31,200/- மதிப்பிலான முதியோர் ஓய்வூதியத்தொகையும், 1 பயனாளிக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக ரூ.35,000/- மதப்பில் ஈமச்சடங்கு உதவிதொகையும், மற்றும் 6 பயனாளிகளுக்கு ரூ.14.24763/- மதிப்பிலான டாப்செட்கோ தனிநபர் கடன் உதவித்தொகையும் என மொத்தம் 2184 பயனாளிகளுக்கு ரூ.21.42 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை பொதுமக்கள் அனைவருக்கும் தெரியக்கூடிய வகையிலும், இது தெரிவதன் மூலமாக அனைவரும் இதில் உறுப்பினராவதற்கும் ஒரு வாய்ப்பினை நமக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்படுத்தி உள்ளார்கள் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் விளிம்பு நிலையில் இருக்கின்ற அடித்தட்டு மக்கள் பயன்பெற வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சீர்மரபினர் என்று அழைக்கப்படுகின்ற 68 சமூகங்களை சார்ந்த மக்கள் பயன்பெற வேண்டும் என்பதன் அடிப்படையில் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களால் சீர்மரபினர் நல வாரியம் 2007 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது, தமிழ்நாடு முதலமைச்சர் இந்த நல வாரியத்தை மறு கட்டமைப்பு ஏற்படுத்தி, ஒரு இலட்சம் சீர்மரபினர் உறுப்பினர் சேர்ப்பதற்கு அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், நான்கு மாத காலத்திற்குள் சுமார் 91,000 உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. அடித்தட்டு மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்த நல வாரிய உறுப்பினர்களுக்கு பல்வேறு வகையான பயன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில். மகப்பேறு உதவித்தொகை, மூக்கு கண்ணாடி உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, 60 வயது நிரம்பிய முதியோர்களுக்கான உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு வகையான பயன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலமாக தமிழ்நாட்டில் வீடுகள் கட்டிவிட்டு 50 ஆண்டுகளாக பட்டாக்களுக்காக சிரமப்பட்ட ஏழை, எளிய 16 இலட்சம் மக்களுக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளியில் படித்த ஏழை எளிய மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் والا மாணாக்கர்களுக்கு கல்விக்கட்டணம் செலவுகளையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் மருத்துவ படிப்புகள் அல்லாது, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் ஆகிய துறைகளை சார்ந்த உயர்கல்வியிலும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினை ஏற்படுத்தி. அவர்களுக்கான கல்வி கட்டணங்கள் உட்பட அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பினையும் அறிவித்தன் அடிப்படையில், ரூ.911 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 40,611 மாணாக்கர்கள் பயன்பெற்று வாழ்வில் உயர்ந்த நிலை அடைவதற்கு வழிவகை ஏற்படுத்தியுள்ளார்கள்.
கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் விளிம்பு நிலை மக்களை உயர்த்துகின்ற ஒப்பற்ற திட்டங்களாக எல்லா இடங்களிலும் பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட முதலமைச்சர் எங்களுக்கு காட்டக்கூடிய திசையில் சீர் மரபினர் நல வாரியத்திற்கான பயன்கள் அத்தனையையும் கொண்டு சேர்ப்பதற்கு நடவடிக்கையை மேற்கொள்வோம் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் மற்றும் சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் செயலர் வா.சம்பத், தெரிவித்ததாவது: இந்த சீர்மரபினர் நலவாரிய ஆணையம் 2007-ல் தொடங்கப்பட்டு தற்போது முதலமைச்சர் அவர்களால் மறுசீரமைக்கப்பட்டு, அமைச்சர் பெருமக்கள், நல வாரிய துணைத்தலைவர். உறுப்பினர்களைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு இலட்சம் சீர் மரபினர் நல வாரிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கினை நிர்ணயத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மதுரை, தஞ்சாவூர், சென்னை ஆகிய மூன்று மண்டலங்களில் ஆய்வுக் கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி அவர்களுடைய சீரிய முயற்சியால் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று, முதலமைச்சர் நிர்ணயத்த இலக்கான ஒரு இலட்சத்தில் இதுவரை சுமார் 91,000 க்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்துள்ளார்கள்.
அதுபோல இந்த உறுப்பினர்கள் சேர்க்கைக்கு முக்கிய காரணமாக நமது வருவாய்த்துறை மூலமாக சிறப்பாக அறிவுரை கூறி எங்களுடைய இலக்கு எய்திட உதவிய வருவாய்த்துறை அமைச்சர் அவர்களுக்கும். வாரியத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கிய நிதி அமைச்சர் அமைச்சர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: சீர்மரபினர் நல வாரியத்தின் மூலமாக முதன்முதலாக நமது மாவட்டத்தில் தான் உறுப்பினர் சேர்க்கையை மாவட்டத்தினுடைய அனைத்து வட்டங்களிலும் நடத்தி, ஏறத்தாழ 2100-ற்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை இன்று வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஏறக்குறைய சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் சீர்மரபினர் வாரியத்தின் மூலமாக வழங்கப்பட இருக்கிறது. இதனுடைய தொடர்ச்சியாக ஒவ்வொரு ஊரிலும் அனைத்து பயனாளிகளையும் விடுபடாமல் அவர்களுக்கு வாரியத்தினுடைய அடையாள அட்டை வழங்குவதற்கும். தற்பொழுது திட்டம் வகுக்கப்பட்டு அதற்கு துறையினுடைய அலுவலர்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலமாக சீர்மரபினர் பிரிவில் வரக்கூடிய உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதன் மூலமாக, சுயதொழில் உள்ளிட்ட வாய்ப்புகளை பெற முடியும்.
அதன் மூலமாக சமுதாயத்தில் பொருளாதாரத்தில் உயரக்கூடிய வாய்ப்புகளையும் பெற முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இதுபோன்று, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் எஸ்.கே.கனகராஜ். சீர்மரபினர் நலவாரிய நிர்வாக அலுவலர் குணசேகர், இராஜபாளையம் நகர்மன்றத் தலைவர் திருமதி பவித்ரா ஷ்யாம், திருவில்லிபுத்தூர் நகர மன்றத் தலைவர் ரவிக்கண்ணன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post சீர்மரபினர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு சீர்மரபினர் நல அடையாள அட்டைகள், நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்கள் appeared first on Dinakaran.