சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு துறை செயலர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பூர், பெரம்பலூர், நாமக்கல், விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்ட ஆட்சியர்களும், 7 மாநகராட்சி ஆணையர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உயர்கல்வித்துறை செயலராக சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிகவரி & பதிவுத்துறை செயலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மனிதவள மேலாண்மைத்துறை அரசு செயலாளராக சி.சமயமூர்த்தி, சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மேலாண் இயக்குநராக ராஜேந்திர ரத்னூ, போக்குவரத்துத் துறை செயலாளராக லில்லி, நிதித்துறை சிறப்பு செயலாளராக வெங்கடேஷ், நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் செயலராக உமா, மகளிர் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக ஷஜீவனா, சமூக நலத்துறை இயக்குநராக சங்கீதா, சமூக சீர்திருத்தத்துறை செயலாளராக மா.வள்ளலார் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியராக வெ.சரவணன், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், செங்கல்பட்டு மாவட்ட அட்சியராக சினேகா, மதுரை மாவட்ட ஆட்சியராக பிரவீன் குமார், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக சுபபுத்ரா, ஈரோடு மாவட்ட ஆட்சியராக கந்தசாமி, நாமக்கல் மாவட்ட ஆட்சியராக துர்கா மூர்த்தி, சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பொற்கொடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலராக கோ.பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிக வரி ஆணையராக எஸ்.நாகராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் ஆணையராக அமித், நெல்லை ஆணையராக மோனிகா ராணா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
The post 9 மாவட்ட ஆட்சியர்களும், 7 மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!! appeared first on Dinakaran.