இந்தநிலையில் பெங்களூரூவில் இருந்து கேரளா வரும் ரயிலில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக பாலக்காடு மற்றும் எர்ணாகுளம் போலீசுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து கேரள எல்லையான பாலக்காடு முதல் ரயில்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.எர்ணாகுளம் வடக்கு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் மற்றும் போதைப் பொருள் தடுப்புத் துறையினர் பயணிகளை கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது பெங்களூரு ரயிலில் இருந்து இறங்கிய 2 இளம்பெண்கள் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களிடம் 2 பெரிய பேக்குகள் இருந்தன. அதைத் திறந்து பரிசோதித்தபோது அதில் 37 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர். இதில் அவர்கள் மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த சுல்தானா (21), காதூன் பீவி (29) என்பது தெரியவந்தது.சுல்தானா முர்ஷிதாபாத்தில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர்கள் 2 பேரும் கேரளாவுக்கு சுற்றுலா செல்வதாக கூறிவிட்டு கஞ்சா கடத்தி வந்தனர். இதற்கு முன்பும் பலமுறை இவர்கள் கஞ்சா கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடத்தலுக்கு ஒரு கிலோவுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாக இவர்களுக்கு கிடைக்கும். இவர்கள் 2 பேரிடமும் ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே போலீஸ், போதைப் பொருள் தடுப்புத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post 37 கிலோ கஞ்சா கடத்திய கல்லூரி மாணவி உள்பட 2 இளம்பெண்கள் கைது appeared first on Dinakaran.