சாலைகளில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை வீடு தேடி குப்பை வாங்க ஏற்பாடு

*எம்எல்ஏ, சப் கலெக்டர் மக்களுக்கு விழிப்புணர்வு

செய்யாறு : செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தில் கீழ்புதுப்பாக்கம் கிராமம் உள்ளது. நகரை ஒட்டிய கிராமம் என்பதால் விரிவு பகுதியில் நாளுக்கு நாள் குடியிருப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒன்றியத்தில் மிகப்பெரிய கிராமமான இந்த கிராமத்தில் குப்பை அகற்றும் பணியில் குறைபாடு உள்ளதாக பல்வேறு பகுதியினர் தொடர்ந்து முறையிட்டதின் பேரில் குப்பை அகற்றும் முறையை மேம்படுத்த கீழ்புதுப்பாக்கம் ஊராட்சியில் குடியிருப்பவர்கள் தங்கள் வீட்டிலேயே குப்பைகளை சேகரித்து வைத்திருந்து தெருவிற்கு குப்பை வண்டி வரும்போது குப்பைகளை தர வேண்டியது மேலும் குப்பைகளை கேரி பேக்குகளில் கொண்டு வந்து கீழ்புப்பாக்கம் சாலைகளிலோ அல்லது போக்குவரத்து வழிகளில் வீசி எரிந்து விட்டு போககூடாது,

தூய்மை பணியாளர்கள் அந்தந்த தெருவிற்கு வரும்போது பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை வழங்க வேண்டும் என்பதற்காக செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி, சப் கலெக்டர் பல்லவி வர்மா, ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரிஜா, சீனிவாசன், திமுக ஒன்றிய செயலாளர் ஞானவேல், முன்னாள் கவுன்சிலர் மகாராஜன், திமுக பிரமுகர்கள் ராம ரவி, பார்த்திபன், ஆறுமுகம், வெங்கடேசன், ஊராட்சி செயலாளர் விமல்குமார் கிராம தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று எந்தெந்த தெருவிற்கு எந்த நாளில் குப்பை வாங்குவதற்கு வருவதற்கான கால அட்டவணை மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

6. மானூரில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு நேர்முகத்தேர்வு

மானூர் : மானூர் ஒன்றிய அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளருக்கான முதற்கட்ட நேர்முகத்தேர்வு நேற்று நடைபெற்றது. மானூர் ஒன்றியத்தில் 183 அங்கன்வாடி நிலையங்கள் உள்ளது. இதில் 23 பணியாளர்கள், 4 உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக இருந்தது. இதனை நிரப்ப சமூக நலத்துறையின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் பணிபுரியவிருப்பமுடைய 752 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இதற்கான முதற்கட்ட நேர்முகத்தேர்வு நேற்று மானூர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. முதற்கட்டமாக நேற்று 270 பேரும், 2வது கட்டமாக இன்றும், தொடர்ந்து 16ம் தேதி 3ம் கட்டமாக நடைபெறவுள்ளது. நேர்முகத்தேர்வில் நெல்லை சமூகநலத்துறை மாவட்ட திட்ட அலுவலர் தனலெட்சுமி, சத்துணவு நேர்முக உதவியாளர் அருணாதேவி, மானூர் வட்டார மருத்துவ அலுவலர் குருநாதன், மாவட்ட கண்காணிப்பாளர் லெட்சுமி, மானூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜபிரியா, மேற்பார்வையாளர்கள் குருஸ் அந்தோணியம்மாள், வேல்மயில், மகேஸ்வரி ஆகியோர் நடத்தினர்.

The post சாலைகளில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை வீடு தேடி குப்பை வாங்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: