ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன் 14: குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் பேசினார். குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து விழிப்புணர்வு பிரசாரம் துவங்கியது. விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘குழந்தை தொழிலாளர்களை தொழிற்சாலை, வியாபார நிறுவனங்களில் பணியில் அமர்த்தக்கூடாது. குழந்தைகள் கல்வியறிவு பெற அரசு பல்வேறு வசதி செய்துள்ளது. அரசின் இந்த அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.
மேலும் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தியது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் தண்டனை விதிக்கப்படும்’ என்றார். இதில் விருதுநகர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி தனம் மற்றும் அனைத்து நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஜெயராஜ் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.
The post குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் நடவடிக்கை மாவட்ட நீதிபதி பேச்சு appeared first on Dinakaran.