கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி: முன்பதிவு செய்ய அழைப்பு

தா.பழூர், ஜூலை 29: கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில் காளான் வளர்ப்பு பயிற்சி 4ம் தேதி நடைபெறுவதால் முன்பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரிம் ஒன்றியம், காங்கேயங்குறிச்சி கிராமத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் 18 முதல் 35 வரை வயது உள்ள அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர் அசோக்குமாயலூர் மாவட்டம் தா. பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் வெற்றி நிச்சயம் என்ற திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு பற்றிய பயிற்சி வருகிற 4-8-2025 முதல் 3-9-2025 வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஜெயங்கொண்டரை 97910 08092 என்ற அலைபேசியை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகு கண்ணன் தெரிவித்துள்ளார்.

The post கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி: முன்பதிவு செய்ய அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: