நடைபயிலும் வண்ணமயில்…விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள்

தஞ்சாவூர், ஜூலை 29: தஞ்சாவூர் பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாலை விரிவாக்க பணிக்காக அந்த பகுதியில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இந்த நிலையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக நெடுஞ்சாலைத்துறை சார்பாக மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது.

எனவே தஞ்சாவூர் கோட்ட பொறியாளர் செந்தில்குமார் அறிவுறுத்தலின் பேரில் தஞ்சை நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் கீதா முன்னிலையில் சாலையின் இரு புறங்களிலும் மரங்கள் நடப்பட்டன. நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை ஏற்றுள்ளது.

The post நடைபயிலும் வண்ணமயில்…விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் appeared first on Dinakaran.

Related Stories: