திருச்சி,ஜூலை 29: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு தொடா்பான மனுக்கள், கலைஞா் மகளிர் உரிமைத்தொகை வேண்டி மனுக்கள், முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை மற்றும் நலிந்தோர் நலத்திட்ட உதவித்தொகைகள் பெறுவது தொடா்பான மனுக்கள், தெருவிளக்கு, தண்ணீர் இணைப்பு குழாய், தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டுவது தொடா்பான மனுக்கள், கல்வி உதவித்தொகை, வங்கி கடன், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள், தையல் இயந்திரம்,
சலவைப்பெட்டி வேண்டி விண்ணப்ப மனுக்கள் மேலும் ஓய்வூதிய பயன், தொழிலாளா் நல வாரியம் தொடா்பான மனுக்கள், வேலை வாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 508 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட கலெக்டர் சரவணன் உத்தரவிட்டார். இந்த குறைதீர் கூட்டத்தில், உதவி கலெக்டர் (பயிற்சி) தீபி சனு, டிஆர்ஓ ராஜலட்சுமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் நல்லையா, துணை கலெக்டர் (அகதிகள் முகாம்) நஜிம் முனிசா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலா் ஜெயசித்ரகலா, அரசுத்துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
The post மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: 508 மனுக்கள் பெறப்பட்டது appeared first on Dinakaran.
