உடுமலை, ஜூன் 14: உடுமலை அருகே உள்ள பெரியபட்டி மற்றும் வெள்ளை செட்டிப்பாளையத்தை சேர்ந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று உடுமலை கோட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:பெரியபட்டி கிராமத்தில் உப்பாற்றை ஆக்கிரமித்து கோழிப்பண்ணை அமைக்கும் பணி நடந்து வருகிறது. புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தும், வண்டிப்பாதையை ஆக்கிரமித்தும் பண்ணை அமைக்கப்படுகிறது.
இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைவதோடு உப்பாறு நீர் மாசுபட்டு மனிதர்கள், கால்நடைகள் தொற்று நோய்க்கு ஆளாகும் நிலை ஏற்படும். கோழிப்பண்ணை கழிவுகள் உப்பாறு நீரில் கலந்து அணைகள் மாசுபடும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து தடுக்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளின் படி நீர்நிலையில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால்தான் பண்ணை அமைக்க முடியும்.எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
The post உப்பாற்றை ஆக்கிரமித்து கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு appeared first on Dinakaran.