உடுமலை, ஜூலை 21: மின் துறையை பொதுத்துறையாக பாதுகாத்திட வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் அமைப்பு, மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு, மின்துறை பொறியாளர் அமைப்பு சார்பில் உடுமலையில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜெகானந்தா, கிளை தலைவர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியமைப்பு தலைமை வகித்தார்.
ஆர்ப்பட்டத்தை விளக்கி ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளார் கிருஷ்ணகுமார், பொறியாளர் அமைப்பின் பொருளாளர் பாலசுப்பிரமணியன், மின் ஊழியர் மத்தியமைப்பின் உடுமலை கிளை செயலாளர் கோவிந்தன் ஆகியோர் பேசினர். வெள்ளியங்கிரி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
