விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி

 

ஈரோடு,ஜூன்14: அகமாதாத் விமான விபத்தில் நேற்று முன் தினம் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்திய இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இரங்கல் நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவரும், கவுன்சிலருமான ஈ.பி.ரவி, துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவர் பாஷா,ஊடக பிரிவுத் தலைவர் முகமது அர்ஷத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: