அம்மாபேட்டை அருகே வாழைத்தோட்டத்தில் வேன் கவிழ்ந்து விபத்து

பவானி, ஜூலை 20: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூர் பகுதியைச் சேர்ந்த 15 பேர், நேற்று முன்தினம் தர்மபுரி அருகே உள்ள அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலுக்கு ஒரு வேனில் சென்றனர். அங்கு வழிபாடு முடித்துவிட்டு நேற்று அம்மாபேட்டை- அந்தியூர் ரோடு வழியாக வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர்.

பூனாச்சி அருகே வேன் வந்தபோது ரோட்டின் குறுக்கே திடீரென மாடு வந்துள்ளது. இதைக்கண்ட டிரைவர் மாட்டின் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்து திருப்பியுள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், ரோட்டோரத்தில் உள்ள வாழைத்தோட்டத்தில் கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணம் செய்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து, அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post அம்மாபேட்டை அருகே வாழைத்தோட்டத்தில் வேன் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Related Stories: