தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது

 

ஈரோடு, ஜூலை 22: ஈரோடு அடுத்த கஸ்பாபேட்டை கள்ள கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் கார்த்தி (36). கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் முள்ளாம்பரப்பு செக்குமேடு பகுதியில் நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த 3 மர்மநபர்கள் கார்த்தியிடம் ஏன் சத்தமாக செல்போனில் பேசுகிறீர்கள் என கூறி வம்பு இழுத்துள்ளனர். அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த மூன்று பேரும் சாலையில் கிடந்த பீர் பாட்டிலால் கார்த்தியின் முகத்தில் அடித்தனர். மேலும், கீழே கிடந்த கட்டையாலும் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து சென்றனர். இதில் காயமடைந்த கார்த்தி, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, கார்த்தி ஈரோடு தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, கார்த்தியை தாக்கிய கஸ்பாபேட்டையை சேர்ந்த சுதாகர் (38), துய்யம்பூந்துறையை சேர்ந்த கோபிநாத் (27), நடுகவுண்டன்பாளையம் சசிகுமார் (32), ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

The post தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: